விளையாட்டு

மாட்ரிட் பொது டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் கோகோ

02/05/2025 05:23 PM

மாட்ரிட் , 02 மே (பெர்னாமா) -- மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டியில்,  உலகின் முதன்நிலை வீராங்கனை ஈகா ஸ்விடேக்கை தோற்கடித்து அதிரடி படைத்திருக்கின்றார், அமெரிக்காவின் கோகோ காஃப் 

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர், போலந்தின் ஸ்விடேக்கை 64 நிமிடங்களில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்துள்ளார். 

இந்த ஆட்டம் இருவருக்கும் கடுமையாக அமையும் என்று கணிக்கப்பட்ட வேளையில்,  கோகோ காஃப் 6-1, 6-1 நேரடி செட்களில் ஸ்விடேக்கை வீழ்த்தினார். 

இந்த வெற்றியின் வழி, கோகோ காஃப் முதன் முறையாக இந்த ஆயிரமாவது WTA போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

மேலும் 2025-ஆம் ஆண்டின் முதல் பட்டத்தை வெல்லும் தருணங்களையும் அவர் நெருங்கியுள்ளார். 

ஒரு கிரண்ட்ஸ்டாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளகோகோ காஃப்   2023 அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி உட்பட,  ஸ்விடேக்கிற்கு எதிரான அனைத்து சாதனையிலும் தப்போது 5-4 என முன்னிலை வகிக்கிறார். 

மாட்ரிட் இறுதி ஆட்டத்தில் கோகோ பெலாருசின் அரினா சபாலென்க உடன் மோதவுள்ளார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)