பொது

வெல்லிங்டனில் மோசமான வானிலை; மலேசியர்களுக்கு பாதிப்பில்லை

03/05/2025 04:45 PM

புத்ராஜெயா, 03 மே (பெர்னாமா) -- நியூசிலாந்தின் வெல்லிங்டன் மற்றும் கேன்டர்பரி வட்டாரங்களில், புயல் சீற்றத்தால் வானிலை மோசமாகி வரும் நிலையில், நாட்டின் வெளியுறவு அமைச்சு, வெல்லிங்டனில் அமைந்துள்ள மலேசிய உயர் ஆணையம் மூலம் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

இதுவரை, மலேசியர் எவரும் அதில் பாதிப்படையவில்லை என்பதை அவ்வமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள மலேசியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அமலாக்கத் தரப்பிடமிருந்து அண்மைய தகவல்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா கூறியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, Wellington-இல் உள்ள மலேசிய உயர் ஆணையம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசிய உயர் ஆணையத்தின் உதவி தேவைப்படும் மலேசியர்கள் கீழ் காணும் முவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு வெல்லிங்டனில் புயல் வீசிய நிலையில், பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதோடு விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.

வெல்லிங்டனில் உள்ள மலேசிய உயர் ஆணையம்

முகவரி ::
10 Washington Avenue, Brooklyn
PO Box 9422, Wellington

தொடர்புக்கு : +64-4-3852439 அல்லது +64-210440188 (அவசர அழைப்பு)

மின்னஞ்சல் முகவரி: mwwellington@kln.gov.my

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)