ஜாலான் அம்பாங், 03 மே (பெர்னாமா) -- இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக தமது குடிமக்களுக்கு விசா விலக்குகளை வழங்கும் மலேசியாவின் முடிவை கொசொவோ குடியரசு வரவேற்கிறது.
இந்தப் புதிய கொள்கை மக்களிடையே உறவுகளை ஊக்குவிப்பதோடு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கொசொவோ அதிபர், டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியு தெரிவித்தார்.
''கொசொவோ மக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை மலேசியா நீக்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, இது நம் நாட்டில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. எனவே, நிறைய பேர் இங்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்'', என்று அவர் கூறினார்.
இது கொசொவோவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று டாக்டர் விஜோசா ஒஸ்மானி-சத்ரியு நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கொசொவோ மக்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய மலேசியா அனுமதித்திருந்த வேளையில், மலேசியர்களுக்கு 90 நாள்கள் விசா விலக்கை கொசொவோ வழங்கியிருந்தது.
மற்றொரு நிலவரத்தில், நாட்டின் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் நினைவிடங்களுக்கு கொசொவோ அதிபர், டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியு வருகைப் புரிந்திருந்தார்
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலமான மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் கல்லறையையும் ஒஸ்மானி பார்வையிட்டார்
அவரோடு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், துன் அப்துல்லாவின் மகன் டான் ஶ்ரீ கமாலுடின் அப்துல்லா மற்றும் மகள் நோரி அப்துல்லா ஆகியோரும் வந்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)