டெவன்ஷயர், 04 மே (பெர்னாமா) -- 2025 இளையோர் ஸ்குவாஷ் போட்டி..
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எகிப்திய வீராங்கனை ஹனா மோட்டாஸைத் தோற்கடித்து, வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றினார் நாட்டின் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை ஐரா அஸ்மான்.
இங்கிலாந்து, டெவன்ஷயர்வில் நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 30வது இடத்தில் இருக்கும் ஐரா, 3-0 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெறறார்.
இருபத்து ஏழே நிமிடங்களில் இந்தப் போட்டியை முடித்து அவர் தமது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றி அனைத்துலக ஸ்குவாஷ் அரசங்கில் அவரது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்னதாக, 21 வயதுடைய ஐரா தமது சகோதரியான ஐஃபா அஸ்மானை அரையிறுதியில் தோற்கடித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)