பொது

கிழக்குக் கரையில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

05/05/2025 05:51 PM

பண்டார் பெர்மாய்சூரி, 05 மே (பெர்னாமா) - கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி செத்தியு சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 590.18 கிலோகிராம் எடையிலான methamphetamine மற்றும் heroin base ரக போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் வழி, இவ்வாண்டில் கிழக்குக் கரையில் செயல்பட்ட மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் முறியடித்துள்ளது.  

சம்பந்தப்பட்ட அந்த போதைப் பொருள் வியட்நாம், Golden Triangle பகுதியில் இருந்து கிளந்தான் மற்றும் திரெங்கானு கடல்மார்க்கமாக கொண்டு வரப்படுவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை JSJN-இன் இடைக்கால இயக்குநர் டிசிபி மாட் சானி @ முஹமட் சலாஹுடின் சே அலி தெரிவித்தார்.

செத்தியு சுற்று வட்டாரத்தில் மறுபொட்டலமிடப்பட்டு கடல் வழியாக ஆஸ்திரேலிய சந்தைக்கு அனுப்பப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரவு மணி 9 அளவில் செத்தியு ஆற்றின் கரையில் முதல் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில், சிலாங்கூரைச் சேர்ந்த 32 வயது உள்நாட்டு ஆடவர் ஒருவரை கைது செய்ததாகவும் டிசிபி மாட் சானி கூறினார்.

இன்று செத்தியு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)