விளையாட்டு

இத்தாலி பொது டென்னிஸ்; முதல் சுற்றில் வென்றார் கிவிடோவா

07/05/2025 04:48 PM

ரோம், 07 மே (பெர்னாமா) -- இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின், மகளிர் பிரிவுக்கான முதல் சுற்றில், செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா வெற்றிப் பெற்றார்.

முன்னாள் விம்பிள்டன் வெற்றியாளரான அவர், தமது குழந்தையை பெற்றெடுத்து, 15 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த பிப்ரவரில் மீண்டும் ஆட்டக் களத்திற்கு திரும்பினார்.

ஆனால், தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்த  கிவிடோவா இவ்வாட்டத்தில் வெற்றிக் கண்டு, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

35 வயதுடைய கிவிடோவா ரொமானியாவின் ஐரினா கமிலியா பெகுவுடன் முதல் சுற்றில் மோதினார்.

அதில், பெகுவை 7-5, 6-1 என்று அவர் நேரடி செட்களில் வென்றார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தையை ஈன்ற கிவிடோவாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

ரோமில் இதுவரை சிறந்த அடைவுநிலையை பதிவு செய்யதாக அவர், இம்முறை முடிந்தவரை போராடி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளார்.

2011 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் வெற்றியாளரான கிவிடோவா , இரண்டாம் சுற்றில் துனிசியாவின் ஓன்ஸ் ஜெபுரைச் சந்திக்கவுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)