பாகிஸ்தான், 08 மே (பெர்னாமா) -- நேற்று அதிகாலை, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் துருப்புகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
அணு ஆயுதங்களைக் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான போர் ஏற்படுவதற்கான நோரடி சமிக்ஞையாகும்.
இந்திய வான்வழித் தாக்குதலினாலும், எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டினாலும் 31 பேர் கொல்லப்பட்டதாக, இஸ்லாமாபாத் தெரிவித்த நிலையில் மொத்தம் 43 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தானின் பதிலடி தாக்குதலினால் குறைந்தது 12 பேர் பலியானதாக புதுடெல்லி தெரிவித்துள்ளது.
''இந்த தியாகிகள் அனைவரின் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழிவாங்க நாங்கள் சபதம் செய்கிறோம்'', என்று நேற்றிரவு மாநில உரையில் பேசியபோது பாகிஸ்தான் பிரதமர் ஷெபா ஷாரிஃப் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)