உலகம்

கொலம்பியா நிலச்சரிவில் ஐவர் பலி

10/05/2025 12:48 PM

சபனெட்டா, 10 மே (பெர்னாமா) -- கொலம்பியா வடமேற்கில் உள்ள சபனெட்டா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவரை காணவில்லை என்று தேடல் மற்றும் மீட்புக் குழு தெரிவித்திருக்கிறது.

தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

பாதுகாப்பு கருதி 70 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள சகதிகளையும் குப்பைகளையும் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவில் சில வீடுகளும் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும், வளங்களைத் திரட்டுவதற்கும் நகராட்சி அலுவலகம் பொது பேரிடர் நிலையை அறிவித்துள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]