கோலாலம்பூர், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தான் கிண்ண காற்பந்தாட்டம்.
நேற்று, மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், சிங்கப்பூரை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தொடர்ந்து நான்காவது முறையாக சிலாங்கூர் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
Red Giants அணியின் சுமார் 20,000 ஆதரவாளர்கள் கூடியிருந்த அவ்வாட்டத்தில், இரு அணிகளுமே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இந்நிலையில், ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் சிலாங்கூர் அணியின் பைசல் ஹலீம் மேற்கொண்ட முயற்சியில் அவ்வணிக்கான முதல் கோல் அடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் சிங்கப்பூரின் டகுமி யோகோஹாடா தமது அணிக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்ததோடு முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், எதிரணியிடமிருந்து தொடர் அழுத்தத்தைச் எதிர்கொண்ட சிலாங்கூர் அணி ஆட்டக்காரர்கள் சிலரை அதன் தலைமை பயிற்றுநர் கிறிஸ்டோபர் மாற்றினார்.
இறுதியாக, சிலாங்கூர் அணிக்கு கிடைத்த பினால்டி வாய்ப்பை கிரிகோர் மோரேஸ் லாவகமாக கோலாக்கி தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் வழி, சிலாங்கூர் சுல்தான் கிண்ணத்தை சிலாங்கூர் அணி 12 முறை வென்றுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)