டாக்கா, 30 செப்டம்பர் (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை தங்களின் மிகப்பெரிய சமய விழாவான துர்கா பூஜையைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இவ்வாண்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில், திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
2022ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வங்காளதேசத்தின் 17 கோடி பேரில் கிட்டத்தட்ட எட்டு விழுக்காட்டினர் இத்துக்கள் ஆவர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அரசாங்கம் வீழ்த்தப்பட்டப் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தீமையை, நன்மை வென்றதைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இப்பூஜையில், பக்தர்கள் திங்கட்கிழமையும் ஆலயங்களில் கூடினர்.
இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துபசரிப்புகளோடு மக்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா வியாழக்கிழமை நிறைவடையும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)