கட்டார், 30 செப்டம்பர் (பெர்னாமா) -- டோஹாவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் தேசிய தேசிய ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ். சிவசங்கரி முன்னேறியுள்ளார்.
அவருடன், 2023-ஆம் ஆண்டில் உலக இளையோர் ஸ்குவார் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்த ஐரா அஸ்மானும் நேற்று நடத்த ஆட்டத்தில், காலிறுதிக்கு செல்லும் தமது வாய்ப்பை உறுதிப்படுத்தினர்.
கலிஃபா அனைத்துலக ஸ்குவாஷ் அரங்கில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகின் ஏழாவது நிலை வீராங்கனையான சிவசங்கரி..
தமது அதிரடி ஆட்டத்தால், பெல்ஜியமின் பிரதிநிதி நெலி ஜிலிசை 11-8, 11-8, 11-5 என்ற புள்ளிகளில் 34 நிமிடங்களில் தோற்கடித்தார்.
25 வயதான அவர், அடுத்த ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியுடன் களம் காணவிருக்கிறார்.
இதனிடையே, 21 வயது ஐரா அஸ்மான் 29 நிமிட ஆட்டத்தில், எகிப்தின் செய்னா மிக்காவியை 11-8, 11-7, 13-11 எனும் புள்ளிகளில் வீழ்த்தினார்.
காலிறுதி ஆட்டத்தில் அவர், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான அமினா ஒர்ஃபியை எதிர்கொள்ளவிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)