விளையாட்டு

தாய்லாந்து சீ; பிங்போங் களத்தில் தங்க இலக்கு

01/10/2025 06:32 PM

தாய்லாந்து, 01 அக்டோபர் (பெர்னாமா) --   தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியின் பிங்போங் களத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் இலக்கை நாட்டின் தேசிய மகளிர் இரட்டையரான கரன் லைன்–தி ஐ ஸின் ஜோடி நிர்ணயித்திருக்கின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் லாவோசில் நடைபெற்ற 2025 Vientiane பிங்போங் உலகத் தொடர் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, அவர்கள் இந்த அடுத்த இலக்கினை குறிவைத்துள்ளனர்.

"உலகத் தொடர் பட்டத்தை நாங்கள் வெல்வது இதுவே முதல் முறை என்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். ஆனால், இது சீ விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதற்கான முன் தயாரிப்பும் கூட. இது எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்", என்று அவர் கூறினார்.

அண்மைய காலமாக பிங்போங் விளையாட்டில் தென்கிழக்காசியாவின் பிற போட்டியாளர்கள் உடனான திறன் இடைவெளி குறைந்து வருவதால், கடந்த 30 ஆண்டுகளாக இதில் மலேசியா பெற முடியாத தங்கப் பதக்கத்தை வெல்ல முடியும் என்று கரன் நம்புகிறார்.

இதனிடையே, தாய்லாந்து சீ போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மட்டுமல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிப் போட்டிகளிலும் தேசிய குழு தங்கம் வெல்ல இலக்கு கொண்டுள்ளதாக தேசிய பயிற்றுநரான பெஹ் லீ வெய் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)