கராச்சி, 03 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த நான்கு நாள்களாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நிகழ்ந்த வன்முறை போராட்டங்களில் குறைந்தது எண்மர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நடந்து வரும் மோதல்களுக்குத் தீர்வுக் காண மூத்த அதிகாரிகள் கொண்ட செயற்குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் அமைத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இதுவரை மூன்று போலீஸ் அதிகாரிகளும், ஐந்து பொதுமக்களும் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, போராட்டம் தொடங்கியதிலிஇருந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையிலான மோதல்கள் இன்னும் குறையவில்லை.
பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கராச்சியில் பேரணி நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில், பொதுமக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, வட்டார அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிற உயர் அரசாங்க அதிகாரிகள் அனுபவிக்கும் சலுகைகளையும் ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பதாக, முன்னதாக, காஷ்மீர் மக்கள் உரிமை குழு தலைவர் ஷௌகாட் நவாஸ் மிர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]