மஹோத்தாரி, 07 அக்டோபர் (பெர்னாமா) -- நேபாளத்தின் தென்கிழக்கு பகுதியான மஹோத்தாரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெள்ள நீரில் கட்டிடங்கள் மூழ்கிய வேளையில், குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக மஹோத்தாரியின் மாவட்ட தலைமை அதிகாரி நாராயண் பிரசாத் ரிசல் தெரிவித்தார்.
உணவு மற்றும் குடிநீருக்காக இடம் பெயர்ந்தவர்களுடன் ஊராட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
நேப்பாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)