பொது

மீண்டும் 100 ரிங்கிட் மதிப்பிலான ரஹ்மா அடிப்படை உதவித் தொகை விநியோகிக்கப்படும்

10/10/2025 08:40 PM

ஜாலான் பார்லிமன், 10 அக்டோபர் (பெர்னாமா)-- அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் 100 ரிங்கிட் மதிப்பிலான ரஹ்மா அடிப்படை உதவித் தொகை விநியோகிக்கப்படும்.

இதில் 18 வயதிற்கு மேற்பட்ட, 2 கோடியே 20 லட்சம் மலேசியர்கள் பயனடைவர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"18 வயதிற்கு மேற்பட்ட 2 கோடியே 20 லட்சம் மலேசியர்களுக்கு, அரசாங்கம் மீண்டும் 100 ரிங்கிட் சாரா உதவித் தொகையை வழங்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தொகை பிப்ரவரி மாத மத்தியில் செலுத்தப்படும். ரமலான் மற்றும் சீனப் பெருநாள் காலத்தில் அது பேருதவியாக இருக்கும்,'' என்றார் பிரதமர்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் வழங்கப்பட்ட வேளையில் அதில் 70 விழுக்காடு செலவளிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

--பெர்னாமா   

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பபு இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)