பொது

பாலியல் தொடர்பான செய்திகளில் ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும்

12/10/2025 05:27 PM

புத்ராஜெயா, 12 அக்டோபர் (பெர்னாமா) - மலாக்கா பள்ளி மாணவியின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது அது விசாரணையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளையோ பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி ஊடகங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், சட்டம் 611, செக்‌ஷன் 15-இன் கீழ் பாதிக்கப்பட்டவரின்  அடையாளத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு முக்கியமான தகவலையும் வெளியிட வேண்டாம் என்று ஊடகவியலாளர்கள் நினைவூட்டப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது, 

இந்த வழக்கு தொடர்பான காணொளிகளை இணையத் தளங்கள் மூலம் வெளியிடுவதும் பரப்புவதும், 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழ் குற்றமாகும் என்றும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

சில மாணவர்கள் சம்பந்தப்பட்ட அக்காணொளியை பகிர்ந்திருப்பதை கடுமையாக கருதுவதோடு, அது தொடர்பில் தற்போது அரச மலேசிய போலீஸ் படை PDRM உடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது. 

அதோடு, விசாரணை செயல்முறையை பாதிக்கும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் உள்ளடக்கங்களை நீக்கும் நடவடிக்கைகளையும் தங்கள் தரப்பு முன்னெடுத்துள்ளாதகவும் எம்சிஎம்சி கூறியது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)