உலகம்

பிலிப்பைன்ஸ்  நிலநடுக்கம்; 66,000-க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

12/10/2025 05:33 PM

டாவோ ஓரியண்டல், 12 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 66,000-க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 100 வீடுகள் முற்றாக சேதமடைந்தன.

டாவோ ஓரியண்டல் மாகாணம் பெரிதும் பாதிக்கட்டுள்ள நிலையில் அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவை கருவியில் 7.4-ஆக பதிவான இந்நிலநடுக்கத்தினால் எண்மர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவில் பதிவான இரு நிலநடுக்கங்களை தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்பு மீட்டுக்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை வரை 800க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இதுவரை, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான மதிப்பீடுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]