இஸ்ரேல், 13 அக்டோபர் (பெர்னாமா) -- தெற்கு இஸ்ரேலில் உள்ள கெட்ஸியோட் சிறைச்சாலையிலிருந்து திங்கட்கிழமை காசாவில் விடுவிக்கப்படுவதற்காக பாலஸ்தீன கைதிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் நீண்ட வரிசையில் இருப்பதைக் காண முடிந்தது.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் 20 பேரும் திங்கட்கிழமை காலை விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது.
மேலும் பாலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற முதல் பேருந்து காசாவை அடைந்ததாக ஹமாஸ் கைதிகள் ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் ஹமாசால் பணயக்கைதிகளாகப் பிடிபட்டவர்களையும், இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளையும் விடுவிப்பதற்கான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான முதல் கட்ட ஒப்பந்தம் குறித்து எகிப்து, கட்டார் மற்றும் துருக்கியுடன் இணைந்து அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,700 பாலஸ்தீனர்களையும், 22 பாலஸ்தீன சிறார்களையும், 360 போராளிகளின் உடல்களையும் இஸ்ரேல் விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)