ஈப்போ, 14 அக்டோபர் (பெர்னாமா)-- இன்று காலை பேராக் ஈப்போ அருகில் உள்ள கெமோர் தெருவில் பெரோடுவா பெஸ்ஸா வாகனம் டிரெய்லருடன் மோதி விபத்துக்குள்ளானதில் அக்காரைச் செலுத்திய ஆடவர் உயிரிழந்தார்.
கார் ஓட்டுநரான 39 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதாரப் பணியாளர் உறுதிபடுத்தினார்.
பின்னிரவு மணி 3.48-க்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குழு சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவு இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமது ஹனாஃபியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், ஹைட்ராலிக் வெட்டும் கருவியைப் பயன்படுத்தி காரின் ஒரு பகுதியை வெட்டி தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை வாகனத்திலிருந்து வெளியேற்றினர்.
மேல் நடவடிக்கைகாக அவ்வாடவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)