வங்காளத்தேச, 18 அக்டோபர் (பெர்னாமா)-- வங்காளத்தேசத்தை மறுசீரமைப்புக்கும் நோக்கில் தயாரிக்கப்பப்பட்டிருக்கும் அத்திட்டத்தில் முந்தைய அரசாங்கத்தை அகற்ற உதவிய ஆர்வலர்களுக்கான கூடுதல் ஏற்பாடுகளை சேர்க்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கலைக்கும் பொருட்டு போலீஸ் கண்ணிர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது.
இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் பலர் காயமுற்றதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக வங்காளதேசத்தை ஆட்சி செய்த அதன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு தங்கள் தரப்பே முக்கிய காரணம் என்பதால் தங்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)