உலகம்

உயிரிழந்த பணயக்கைதிகளை ஒப்படைக்கும் வரை ராஃபா எல்லை மூடப்படும்

19/10/2025 02:31 PM

ராஃபா எல்லை, 19 அக்டோபர் (பெர்னாமா) --   மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ராஃபா எல்லை மீண்டும் திறக்கப்படாது என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நேற்றிரவு அறிவித்தது.

உயிரிழந்த பணயக்கைதிகளைத் திருப்பி அனுப்புவதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதிலும் ஹமாஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொருத்தே ராஃபா எல்லையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அந்த அலுவலகம் தெரிவித்ததிருக்கிறது.

எகிப்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களைக் காசாவுக்குத் திரும்ப செல்ல அனுமதிக்கும் வகையில் ராஃபா எல்லை திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று கெய்ரோவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் முன்னதாக அறிவித்தது.

இருப்பினும், உயிரிழந்த பணயக்கைதிகளை ஒப்படைக்கும் வரை இந்த எல்லை மூடப்படும் என்று இஸ்ரேல் கூறியிருக்கிறது.

இந்நிலையில் எல்லையை மூடுவது சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறும் நடவடிக்கை என்று ஹமாஸ் சாடியிருக்கிறது.

காசாவுக்குள் நிவாரண உதவிகளைக் கொண்டுச் செல்வதற்கான முக்கிய வழியாக ராஃபா எல்லை பயன்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)