கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) -- கல்வி, வேலை, திருமண வாழ்க்கை என்று பல சூழ்நிலைகளால் குடும்பத்தையும், சொந்த வசிப்பிடத்தையும் விட்டு, பிரிந்து சென்றவர்கள், மீண்டும் தங்களின் மண் வாசத்தை அனுபவிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் தருணம் இது.
அந்த வகையில், கோலாலம்பூர் TBS ஒருங்கினைந்த பேருந்து முனையம் இன்று காலை முதல் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.
வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில் இருந்த சிலரின் மகிழ்ச்சியான தருணங்களை பெர்னாமா செய்திகளுக்காக கேட்டறிபப்பட்டது.
சொந்த வாகனத்தில் பயணிப்பதற்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும், சிக்கனமான பயணத்தை மேற்கொள்வதற்கு பொதுப்போக்குவரத்து சேவை உறுதுணையாக உள்ளதை பலர் மறுக்கவில்லை.
வெகு நாட்களுக்கு பின்னர், தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் ஆவல் மேலோங்கியுள்ளதாக தெரிவித்தார் காயத்ரி சூரியமூர்த்தி .
''தங்கும் விடுதியில் தனிமையில் இருந்து ஒரு பயனுமில்லை, வீட்டுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவதுதான் சிறந்தது, அதுமட்டுமின்றி இன்றைக்கு பெரிய கால்பந்து விளையாட்டு நடைப்பெற உள்ளது, அவ்வாறு அந்த கால்பாந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டே நான் என் குடுப்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவேன்,'' என்றார்.
''இன்னும் சில தீபாவளி ஏற்பாடுகள் செய்வதற்கு உள்ளன. இறைவனின் ஆசிர்வாதாதிதில் நாளையா தீபாவளி சிறப்பாக அமையும் என்று எதிர் பார்க்கிறேன்,'' என்றார் தீபன் ராஜ் காளிமுத்து
அதுமட்டுமின்றி, பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வெளி சுற்றுச்சூழலை இரசித்து பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் யோகஷீலா தமிழரசு.
"எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டு இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் குறுகிய கால கட்டாத்தில்தான் வீட்டிற்கு செல்கிறேன். அதையும் தாண்டி எனக்கு பேருந்தில் வீட்டிற்கு செல்வதுதான் மீகவும் பிடிக்கும். அந்த ஜன்னல் ஒரத்தில் அமர்ந்து, பாடல் கேட்டுக் கொண்டு சுற்றுச்சூலை இரசித்து கொண்டு செல்வதே எனக்கு மிகவும் பிடிக்கும்,''
இவ்வாண்டு தீபாவளி பண்டிகைத் திங்கட்கிழமைக் கொண்டாடப்படுவதால், இதர இனத்தவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த நீண்ட விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதையும்TBS ஒருங்கினைந்த பேருந்து முனையத்தில் காண முடிந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)