பினாங்கு, 21 அக்டோபர் (பெர்னாமா)-- கடந்த சனிக்கிழமை, காம்போங் செகோலா ஜுரூ-வில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் எந்தவோர் ஆருடம் மற்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
உண்மையான குற்றவாளியை கண்டறியும் விசாரணையையும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் இந்நடவடிக்கை பாதிக்கக்கூடும் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 51 வயதான சட்டம் சே ஹின் மற்றும் அவரது வளர்ப்பு மகளான 11 வயதுடைய நூர் அஃப்ரினா அலிஷா அப்துல் ரஹீம் ஆகிய இருவரும் தங்கள் வாடகை வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அச்சிறுமி மேல் மாடியில் இறந்து கிடந்த நிலையில் தாயார் சமையலறையில் இறந்து கிடந்தார்.
கொலை செய்யப்பட்ட அம்மாதுவின் கணவர் மற்றும் வங்காளதேச ஆடவர் ஒருவர் உட்பட குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)