அரசியல்

ஆயர் கூனிங் இடைத்தேர்தல் பணியில் 1114 போலீஸ் அதிகாரிகள்

11/04/2025 06:46 PM

தாப்பா, 11 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் காலக்கட்டம் முழுவதும் மொத்தம் ஆயிரத்து 114 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாளை, சனிக்கிழமை அதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள வேளையில்,  சுமார் 778 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர் என்று பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.

பிரச்சாரக் காலக்கட்டம் முழுவதும் 732 அதிகாரிகள் பணியில் இருப்பர் என்றும் தேர்தல் அன்று 1,114 பேர் பணியாற்றுவர் என்று அவர் கூறினார்.

"இந்தக் காலக்கட்டத்தில் போலீஸ் இருப்பார்கள். ஆனால், மாவட்டம் அல்லது மாநில போலீஸ் படையினரை மேற்கோள் காட்ட வேண்டாம். பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாங்கள் ஒன்றிணைகிறோம்," என்றார் அவர்.

ஆயர் கூனிங், இடைத்தேர்தலை முன்னிட்டு பேராக், மலேசிய போலீஸ் படையின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் நோர் ஹிஷாம் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)