ஜப்பான், 21 அக்டோபர் (பெர்னாமா)-- ஜப்பானை ஆளும் முற்போக்கு ஜனநாயக கட்சி தலைவர் Sanae Takaichi-ஐ, அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு இன்று நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில், 237 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில், பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் Sanae Takaichi.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் Shigeru Ishiba தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தமது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் Sanae Takaichi, உள்கட்சி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை பிரதமராக தேர்ந்தெடுக்க இன்று நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற Sanae Takaichi, விரைவில் ஜப்பானின் 104வது பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)