பொது

அக்டோபர் 22-ஆம் தேதி வரை, ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 0.05%, இடைநிலைப் பள்ளிகளில் 0.59% பதிவு

22/10/2025 05:16 PM

ஜாலான் பார்லிமென், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- இவ்வாண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரையில் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 0.05 விழுக்காடாகவும் இடைநிலைப் பள்ளிகளில் 0.59 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு மாணவரும் பள்ளி படிப்பை முடிக்கும் வரையில் கல்வி செயல்முறையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டிரும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு செயல்முறையின் வழி இப்புள்ளி விவரங்கள் பெறப்பட்டதாக அதன் துணை அமைச்சர் வொங் கா வொ தெரிவித்தார். 

"கல்வி அமைச்சின் எஸ்.ஐ.பி எங்களிடம் உள்ளது. அதே வேளையில், இந்த அமைப்பு கடந்த மே மாதம் ஏ.ஐ விண்ணப்ப முறையுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஏ.ஐ உதவியுடன் படிப்பை நிறுத்தும் அபாயத்தில் உள்ள ஒவ்வொரு மாணவரும் மாணவரின் அனுமதியுடன் என்ன ஆர்வம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் பள்ளியின் நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும். மேலும், மாணவர்களின் நலன்களுக்கும் கல்வியின் தூரநோக்கிற்கும் உதவ முடியும்," என்று வொங் கா வொ கூறினார். 

இன்று மக்களவையில் மாணவர் இடைநிற்றல் விகிதம் மற்றும் அதனைத் தீர்வுக் காண கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள SELAYANG நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு வொங் கா வொ அவ்வாறு பதிலளித்தார்.

பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மாவட்ட கல்வி அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் ஒருங்கிணைந்த அமைப்பின் வழி செயல்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)