உலகம்

எவரெஸ்ட்; கடுமையான பனிப் பொழிவினால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

30/10/2025 06:42 PM

நேபாளம், 30 அக்டோபர் (பெர்னாமா) -- எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் உள்ள முகாமிற்கு அருகே, சிக்கி கொண்ட மலையேறிகளை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

அதன் விமானி உயிர் தப்பிய நிலையில், மலையேறிகள் மீட்கப்பட்டிருப்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என்று நேபாள பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

புயல் காற்றினால் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக நேபாளம் மற்றும் சீனாவில் எவரெஸ்ட் பகுதிகள் புதன்கிழமை மூடப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)