உலகம்

புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சியது வடகொரியா

22/10/2025 08:23 PM

பியொங்யாங், 22 அக்டோபர் (பெர்னாமா) -- வடகொரியா, தங்கள் திசையில் இருந்து ஒரு புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை நடத்தி இருப்பதாகத் தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியிருக்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகு ஏவப்பட்டிருக்கும் முதல் புவியீர்ப்பு ஏவுகணை இதுவென்றும் தென்கொரியா கூறியுள்ளது.

தென்கொரியாவின் கிழக்குத் திசையை நோக்கி ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் கூறினர்.

வட கொரியா புவியீர்ப்பு ஏவுகணைகளைத் தயாரிக்க உலகளவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தடைக்கு அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் வடகொரியா அதனை பொருட்படுத்தவில்லை.

அடுத்த வாரம் தென்கொரியாவின் Gyeongju நகரில் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு APEC உச்சநிலை மாநாடு நடைபெறும் நிலையில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

அம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவிருக்கிறார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)