உலகம்

பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் பலி

24/10/2025 03:05 PM

ஆந்திர பிரதேசம், 24 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவின் தெற்கு தொழில்நுட்ப நகரங்களான பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான பாதையில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் எரிபொருள் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையாக இருந்தாலும், அந்நாடு மிகவும் ஆபத்தான சாலைகளைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஜனவரி மாதத்தில் தெரிவித்திருந்தனர்.

பேருந்தில் இருந்த 41 பயணிகளில் 21 பேர் காப்பாற்றப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின், 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ராஜஸ்தானில் இதேபோன்ற ஒரு விபத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)