சிலாங்கூர், 24 அக்டோபர் (பெர்னாமா)-- வரும் ஞாயிற்றுக்கிழமை ஆசியானில் தீமோர் லெஸ்தே-வின் முழு உறுப்பியத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக அந்நாட்டு பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்பான மிகப்பெரிய அறிவிப்பிற்காக காத்திருக்கவே தாம் மலேசியாவிற்கு வருகை புரிந்ததாக குஸ்மாவோ பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை புரிந்தபோது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவர் அவ்வாறு கூறினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய அறிவிப்பை எதிர்பார்க்கிறீர்களா? நான் இதற்காகத்தான் வந்தேன், நிச்சயமாக என்றார் குஸ்மாவோ.
குஸ்மாவோவும் அவரின் பேராளர் குழுவும் முன்னதாக ஒரு சிறப்பு விமானத்தில், நண்பகல் 12.30 மணிக்கு KLIA-வை வந்தடைந்தனர்.
அவர்களை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வரவேற்றார்.
அக்டோபர் 26 ஆம் தேதி, Timor-Leste ஆசியானின் முழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக உறுதிப்படுத்தி இருந்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)