சிலாங்கூர், 24 அக்டோபர் (பெர்னாமா)-- ஆசியான் சமூக தொலைநோக்கு பார்வை 2045-ஐ உருவாக்குவதற்கான முயற்சிகள் உள்ளடக்கிய தன்மை மற்றும் நிலைத்தன்மையின் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த மேம்பாடு அறிவியல் பசுமை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் நலன்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
''மக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும்போது, அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆசியானை உருவாக்குவதற்கான சூழலை நாம் கைவிடுகிறோம் என்று அர்த்தமல்ல. அந்த சூழலை நாம் நிரந்தர மேற்பார்வையாளராகவோ அல்லது உரிமையாளர்களாகவோ கொண்டுள்ளோம். ஆசியான் சமூக தொலைநோக்கு 2045-இன் 20 ஆண்டுகள் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாகவும், இந்த மூன்று முக்கிய விஷயங்களை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் நாம் திசையை இழக்கக்கூடாது, நமது வேர்களை இழக்கக்கூடாது.''
என்றார் ஹசான். 
கோலாலம்பூரில் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு ஆசியான் திட்டங்களை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அவ்வாறு குறிப்பிட்டார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)