அரசியல்

முன்னாள் ராணி சிரிகிட் காலமானார்

25/10/2025 04:06 PM

பேங்கோக் தாய்லாந்து, அக்டோபர் 25, (பெர்னாமா) -- தாய்லாந்து மன்னர் Vajiralongkorn-னின் தாயார், முன்னாள் ராணி சிரிகிட் காலமானதை அந்நாட்டு அரச அலுவலகம் அறிவித்தது.

அவருக்கு வயது 93.

தாய்லாந்து, பாலாங் மேரா சங்கத்தின் பராமரிப்பில் உள்ள ராஜா சூழலொங்கோர்ன்  நினைவு மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணிக்கு சிரிகிட் காலமானதாக அரச அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரின் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தது.

அரச சடங்குகள்படி மிக உயரிய மரியாதையுடன் ராணியின் இறுதிச் சடங்கை நிர்வகிக்க பணியகத்திற்கு மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

பேங்காக், அரச அரண்மனையில் உள்ள செரி டுசிட் மஹா ப்ரசாட் மண்டபத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)