பொது

வல்லரசு நாடுகளுடன் உறவைப் பேணும் பங்கை ஆசியான் நிரூபித்துள்ளது

28/10/2025 02:07 PM

ஜாலான் பினாங், 28 அக்டோபர் (பெர்னாமா) --   உலக வல்லரசு நாடுகளுடன் சமநிலையான உறவைப் பேணுவதற்கான முதன்மை பங்கை ஆசியான் மீண்டும் நிரூபித்துள்ளது.

மையக் கொள்கை மீதான ஆசியான் அமைப்பின் உறுதியான கடப்பாடு, அமெரிக்கா மற்றும் சீனாவுடன் கொண்டுள்ள நல்லுறவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, உலகின் பல்வேறு அனைத்துலக பங்காளிகளுடன் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான்-சீனா உச்சநிலை மாநாட்டின் தொடக்க உரையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் இன்று சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் தாம் மேற்கொண்ட சந்திப்புகளின் போது அதன் பிரதிபலிப்பு தெளிவாக தெரிந்ததாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

இந்த தொடர்ச்சியான ஈடுபாடு, உலகளாவிய நிலையில் சவால்களைக் கூட்டு முறையில் சமாளிக்க, பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் வகையில் மறைமுகமாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சீனாவின் நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்காக இந்தப் பாராட்டு அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். தற்போது நாம் ACFGA 3.0 மேம்படுத்தும் நெறிமுறையைப் பார்த்து, அதை நேரில் கண்டிருக்கிறோம். இது நமது பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான வளர்ச்சியைக் குறிக்கிறது. எஃப்.தி.ஏ அடிப்படையில் இந்த அற்புதமான சாதனைக்காக ஆசியான் மற்றும் சீனாவில் உள்ள எனது நண்பர்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன். முதல் ஆசியான்-சீனா எஃப்.தி.ஏ", என்றார் அவர்.

வட்டார கூட்டமைப்புக்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளின் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆசியான்-சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ACFTA 3.0-இல் கையெழுத்திடும் விழாவை, முன்னதாக டத்தோ ஶ்ரீ அன்வார் மற்றும் லி கியாங் பார்வையிட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)