புது டெல்லி, 29 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவில், புது டெல்லியில், செயற்கை மழைப்பொழிவிற்கும், காற்றுத்தூய்மைக்கேட்டை குறைக்கவும் செவ்வாய்க்கிழமை மேக விதைப்புக்கான பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய அதிகாரிகளின் இந்நடவடிக்கை, அந்நாட்டு மக்களிடையே சினத்தை தூண்டியுள்ளது.
இந்தியத் தலைநகரின் சில பகுதிகளில் நீடித்து வரும் மோசமான காற்று மாசுபாடு பிரச்சனையைக் கையாள, செயற்கை மழை பொழிவிற்கும், காற்றுத்தூய்மைக்கேட்டை போக்கவும் விமானம் ஒன்றிம் மூலம் மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.
மேக விதைப்பு என்பது மழையைத் தூண்டுவதற்காக மேகங்களில் ரசாயனங்களைக் கலக்கும் வானிலை மாற்ற முறை, மேற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், அதன் செயல்திறன் நிச்சயமற்றதாகவே உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இச்சோதனை அரசாங்கத்தின் கன்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், வரும் நாட்களில் இந்நடவடிக்கையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி அமைச்சர் மன்ஜின்டர் சிங் சிர்சா தெரிவித்தார்.
எனினும், இவ்விவகாரத்தில் இதுபோன்று ஒரு நாளுக்கு மட்டும் என்ற தற்காலிக தீர்வை தேடாமல், நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்குமாறு பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)