பொது

டிவெட்டில் எஸ்.பி.எம் முடித்த மாணவர்களின் பங்கேற்பு 2030-குள் 70% அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு

29/10/2025 06:12 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- 13-வது மலேசியா திட்டத்தின் கீழ், தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி டிவெட்டில் எஸ்.பி.எம் முடித்த மாணவர்களின் பங்கேற்பு 2030 ஆம் ஆண்டுக்குள் 70 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்கள் டிவெட்டைத் தேர்ந்தெடுத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இது மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்த 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களைக் காட்டிலும் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.

''தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி. தேசிய அளவில் அதன் சந்தைப்படுத்தல் திறன், சராசரியாக 95.1% ஆகும். இதன் பொருள் டிவெட்டில் இணையும் 100 பேரில் 95 பேர் வேலை பெறுகிறார்கள். சில நேரங்களில் பட்டம் பெறுவதற்கு முன்பு, அவர்களுக்கு வேலை கிடைக்கும். அதுதான் தேசிய சராசரி. அம்மைச்சின் கீழ் உள்ள டிவெட் நிறுவனங்களின் சராசரி என்ன? அதன் சந்தைப்படுத்தல் திறன், அதன் வேலைவாய்ப்பு திறன்? அதன் சந்தைப்படுத்தல் திறன் 98.7 விழுக்காடாகும்,'' என்றார் அவர்.

புதன்கிழமை, நாடாளுமன்றக் கட்டிடத்தில் மடானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது டாக்டர் அஹ்மட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)