புத்ராஜெயா, அக்டோபர் 29 (பெர்னாமா) -- இதனிடையே, மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வகையான அனைத்துலக ஒத்துழைப்பும் முழு பரிசீலனையுடன் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் தேசிய இறையாண்மைக் கொள்கையை தியாகம் செய்யாமல் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஃபஹ்மி வலியுறுத்தினார்.
"அந்நிறுவனத்துடன் வருமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, நமது நாட்டின் இறையாண்மையை அடகு வைப்பது என்பது உண்மையா? உண்மை இல்லை. ஏன்? குறிப்பாக எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் தேசிய சட்டத் துறையால் ஆராயப்படும்போது அமைச்சரவை, அமைச்சர்கள் குழுவால் உடன்பட முடியுமா? நமது தேசிய இறையாண்மையை விற்கும் நிலைக்கு நாம் எப்படி செல்ல முடியும்? சாத்தியமற்றது," டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வினவினார்.
கோலாலம்பூரில் பல முக்கிய உலகத் தலைவர்கள் அண்மையில் இருந்தது, சமநிலையான மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய உறவுகளைப் பேணுவதற்கான ஆற்றலில், மலேசியா மீதான அனைத்துலக நம்பிக்கையை தெளிவாகப் பிரதிபலிப்பதை ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)