விளையாட்டு

20 லட்சம் ரிங்கிட் செலவில் சிப்பாங்கில் புதிய பந்தயத் தளம்

29/10/2025 06:55 PM

புத்ராஜெயா, அக்டோபர் 29 (பெர்னாமா) -- நாட்டில் மோட்டார் பந்தய விளையாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக அடுத்த ஆண்டு சிப்பாங் பகுதியில் அதற்காக ஒரு புதிய தளத்தை உருவாக்க இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சிப்பாங் அனைத்துலக பந்தய வளாகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 20 லட்சம் ரிங்கிட், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று துணை அமைச்சர்  அடாம் அட்லி தெரிவித்தார்.

"தற்போது சிப்பாங்கில் புதிய திட்டம் ஒன்றை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 2026ஆம் ஆண்டுக்குள் சிப்பாங் பகுதியில் ஒரு புதிய பந்தயத்தளத்தை அமைக்கும் திட்டம் இது. இதற்கான ஒதுக்கீடு 20 லட்சம் ரிங்கிட் ஆகும். இந்த நிதி சிபாங் அனைத்துலகச் தளத்திம் சொந்த ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்,” என அடாம் அட்லி கூறினார்.

அத்திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பிற மாநிலங்களிலும் இது மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அடாம் அட்லி தெரிவித்தார்.

பத்தய தளத்தை அமைப்பது தொடர்பான பரிந்துரையை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை மீண்டும் மதிப்பாய்வு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்தின்போது அடாம் அலி அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)