தென் கொரியா, அக்டோபர் 29 (பெர்னாமா) -- தென் கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் "மிக விரைவில்" இறுதி செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
"தென்கிழக்கு தென் கொரிய நகரமான யொங்க்ஜுவிற்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஏ.பி.ஈ.சி தலைமை செயல்முறை அதிகாரிகளின் உச்சநிலை மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கொரிய குடியரசுடன் எங்கள் ஒப்பந்தம் மிக விரைவில் இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தங்கள் நம் அனைவருக்கும் நம்பமுடியாத வெற்றிகளாக இருக்கும்," என டோனல்ட் டிரம்ப் கூறினார்.
ஜூலை மாத இறுதியில் அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தன.
அமெரிக்காவில், தென் கொரியா 35 ஆயிரம் கோடி டாலர் புதிய முதலீடுகளுக்கு ஒப்புக்கொள்வதன் மூலம் அதன் மீது விதிக்கப்படும் மோசமான வரிகள் தவிர்க்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தின் கீழ் இணக்கம் தெரிவிக்கப்பட்டன.
எனினும், அந்த முதலீடுகளின் கட்டமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முடக்கம் கண்டன.
முன்னதாக, தென் கொரியாவின் லீ ஜே ம்யோங் உடனான உச்சநிலை மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்த நம்பிக்கையுடன், டிரம்ப் தனது ஆசியப் பயணத்தின் இறுதிக் கட்டமாக புதன்கிழமை தென் கொரியாவிற்கு சென்றுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)