மூவார், 30 அக்டோபர் (பெர்னாமா) -- ஜோகூர், மூவாரின், ஜாலான் பிந்தாசான் பகிரியில் நேற்று இரவு இரு கார்கள் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 9.47 அளவில் தமது தரப்பிற்கு தகவல் கிடைத்ததாக மூவார் தீயணைப்பு, மீட்புத் துறையின் மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் பெத்ரி மஹாட் குறிப்பிட்டார்.
12 பேர் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஹோண்டா சிட்டி மற்றும் தோயாட்டா வியோஸ் ரக இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்தது.
ஹோண்டா சிட்டியை செலுத்திய 19 வயது பெண் அவருடன் பயணித்த 25 வயது ஆடவரும் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளாகினர்.
இதனிடையே தோயாட்டா வியோஸ் ரக காரைச் செலுத்திய 44 வயதான பெண் காயமடைந்த நிலையில் அவருடன் பயணித்த 73 வயதுடைய மூதாட்டி காரில் சிக்கிக் கொண்டார்.
சிக்கிக் கொண்ட மூதாட்டியை தீயணைப்புத் துறை காரில் இருந்து வெளியேற்றினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் மூதாட்டி உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)