ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையம், 01 நவம்பர் (பெர்னாமா) -- சீனா தனது சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு ஷென்சோ-21 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இப்பணியின் மூலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் நான்கு எலிகளும் அனுப்பப்பட்டுள்ளன.
இக்குழுவினர் சுமார் ஆறு மாதங்கள் டியான்காங் விண்வெளி நிலையத்தில் தங்கி 27 அறிவியல் திட்டங்களை மேற்கொள்வார்கள்.
எடையற்ற நிலையில் எலிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகச் சீனா முதன்முறையாக விண்வெளிக்கு எலிகளை அனுப்பியுள்ளது.
ஐந்தில் இருந்து ஏழு நாட்களுக்குள் எலிகள் பூமிக்குத் திரும்பவுள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்பும் திட்டத்திற்கு ஏற்ப சீனாவின் இவ்விண்வெளித் திட்டம் அமைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)