ஜாலான் பார்லிமன், 11 நவம்பர் (பெர்னாமா) -- கிளந்தான், சபா மற்றும் பெர்லிஸ் போன்ற குறைந்த வருமானம் ஈட்டும் மாநிலங்கள் உட்பட எந்தவொரு மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டாது என்பதை மடானி பொருளாதார கொள்கை நிரூபித்துள்ளது.
உண்மையான தேவைகளின் அடிப்படையில், குறிப்பாக நீர், மின்சார சேவை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அடிப்படை பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இம்மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டு அதிகரிப்பின் மூலம் வட்டாரங்களுக்கு இடையில் சமநிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுவதையும் வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு மட்டும் இது கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் மடானி பொருளாதாரக் கொள்கை நிரூபித்துள்ளதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீட்டை நான் விளக்கியுள்ளேன். ஆரம்ப கட்டங்களில் அநீதி மற்றும் பலவற்றிற்காக நாம் நிறைய தாக்கப்பட்டதை ஸ்ரீ காடிங் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் புள்ளிவிவரங்களை வழங்கும்போது, தண்ணீர், மின்சாரம் மற்றும் வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக் கவனம் செலுத்தப்படுகிறது. கிளந்தானுக்குக் கூடுதல் அதிகரிப்பு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் அதிகரிப்பு உள்ளது. இப்போது சபா உட்பட,'' அன்வார் தெரித்தார்.
இன்று மக்களவையில் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசன் எழுப்பியக் கூடுதல் கேள்விக்குப் பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)