பொது

நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதில் சட்டவிரோத சிகரெட்டுகளின் விநியோகம் முறியடிப்பு

11/11/2025 07:28 PM

ஷா ஆலம், 11 நவம்பர் (பெர்னாமா) -- அக்டோபர் 18ஆம் தேதி சுங்கை பூலோவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டு 10 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புடைய பல்வேறு முத்திரைகளிலான சிகரெட்டுகளையும் பிற பொருட்களையும் பறிமுதல் செய்ததன் மூலம் சட்டவிரோத சிகரெட்டுகளின் விநியோகத்தை முறியடிப்பதில் வெற்றி பெற்றதாகப் போலீசார் நம்புகின்றனர்.

இச்சோதனையின் போது ​அவர்கள் அனைவரும் சிகரெட்டுகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெட்டிகளை ஒரு லாரியில் இருந்து சில வாகனங்களுக்கு மாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

''கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். மேலும், பகுதிநேர சிகரெட் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு நிர்வகிக்கப்படும் பொருட்களின் அளவைப் பொறுத்து அவருக்குச் சுமார் 100 லிருந்து 200 ரிங்கிட் வரை ஊதியம் கிடைக்கும்,'' டத்தோ ஷசெலி கஹார்

கைது செய்யப்பட்ட ஆடவர்கள் அனைவரும் 1967ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம் செக்‌ஷன் 135(1)(d) மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் செக்‌ஷன் 6(1)(c)இன் கீழ் மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)