மெக்சிகோ, 11 நவம்பர் (பெர்னாமா) -- ஏ.தி.பி இறுதியாட்ட டென்னிஸ் போட்டியில், தமது பட்டத்தை தற்காக்கும் முதல் முயற்சியில் இத்தாலிய வீரர் யானிக் சின்னர் வெற்றிப் பெற்றுள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், அவர் கனடாவின் ஃபெலிக்ஸ் ஒஜே அலியாசிம்மை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் கடும் போட்டியை வெளிப்படுத்தினர்.
ஆனாலும், 7-5, என்ற நிலையில் சின்னர் முதல் செட்டை வென்றார்.
இரண்டாம் செட் ஆட்டத்தின் போது ஒஜே அலியாசிம்மின் இடது காலில் ஏறபட்ட காயம் அவரை அவரை போட்டியில் இருந்து பின்னடைவை சந்திக்கும் சூழலுக்கு தள்ளியது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி, 6-1 எனும் நிலையில் வெற்றிப் பெற்று சின்னர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நீடித்தது.
இது, சின்னரின் தொடர்ச்சியான 27-வது வெற்றியாகும்.
தற்போது முதலிடம் கார்லோஸ் அல்கராஸ் கையில் இருக்கும் வேளையில், இந்தப் போட்டியில் சின்னர் கிண்ணத்துடன் வாகை சூடினால், அந்த இடத்தை அவர் கைப்பற்றும் வாய்ப்பும் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)