பொது

பெரோடுவாவின் முதல் மின்சார வாகனம் நாட்டின் முதன்மை திட்டமாக கவனம்

11/11/2025 05:57 PM

கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பெரோடுவா நிறுவனத்தின் தயாரிப்பிலான முதல் மின்சார வாகனம் நாட்டின் முதன்மை திட்டமாக கவனம் செலுத்தப்படும்.

மலேசியாவை வட்டார எரிசக்தி ஆற்றல் கொண்ட மற்றும் நிலையான வாகன மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உள்நாட்டு புத்தாக்க மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மலேசியாவின் ஆற்றலை வசதிக்கு உட்பட்டு உள்நாட்டு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் பெரோடுவா நிரூபித்துள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

''மடானி கொள்கையைக் கொண்ட நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெரொடுவாவின் அண்மைய அதிநவீன தயாரிப்பிலான ஒரு காரின் அறிமுகத்திற்காக நான் காத்திருக்கிறேன். இந்த மாத இறுதியில் இது அறிமுகப்படுத்தப்படும். வசதிக்கு உட்பட்டு இருப்பதால் இது மடானி கொள்கையை பூர்த்தி செய்வதாக நான் குறிப்பிட்டேன்,'' என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

சிலாங்கூர், ரவாங்கில் உள்ள அதன் உற்பத்தி தொழிற்சாலையில் பெரோடுவா ஊழியர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)