விளையாட்டு

குமாமாடோ மாஸ்டர்ஸ்; வரலாறு படைத்த பெர்லி - தினா ஜோடி

16/11/2025 06:51 PM

ஜப்பான், 16 நவம்பர் (பெர்னாமா) -- ஜப்பானில் குமாமாடோ மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற முதல் மலேசிய அணியாகத் தேசிய மகளிர் இரட்டையர் பெர்லி தான்.எம் தினா ஜோடி வரலாறு படைத்துள்ளனர்.

அந்த ஜோடி பி.டபல்யூ.எப் உலகத் தொடர் போட்டியில் மூன்றாவது பட்டத்தையும் இன்று பதிவு செய்தனர்.

குமாமாடோ மாவட்ட ஜிம்நேஜீஅத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் தரவரிசையில் உள்ள பெர்லி தான்.எம் தினா ஜோடி இரண்டு செட்களிலும் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உபசரணை நாட்டைச் சேர்ந்த ரின் இவனகா-கியே நகானிஷியை 22-20, 21-19 என்ற புள்ளிகளில் தோற்கடித்தது.

2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்போட்டியில் பெர்லி தான்.எம் தினா வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.

இவர்களின் இச்சாதனை, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த லியோங் ஜூன் ஹாவ்வின் சாதனையை முறியடித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)