விளையாட்டு

ஏ.டி.பி ஃபைனல்ஸ்; சின்னர் வெற்றி

17/11/2025 02:42 PM

துரின், 17 நவம்பர் (பெர்னாமா) -- ஏ.டி.பி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை வென்று இத்தாலியின் யான்னிக் சின்னர் சாதனை படைத்துள்ளார்.

உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான கார்லஸ் அல்காராசுடன் விளையாடினாலும் சின்னர் சிறப்பான ஆட்டத்தைப் பதிவு செய்தார்.

சொந்த அரங்கில் விளையாடிய யான்னிக் சின்னர் கூடுதல் பலத்துடன் களமிறங்கினார்.

முதல் செட்டை 7-6 என்ற புள்ளிகளிலும் இரண்டாம் செட்டை 7-5 என்ற புள்ளிகளிலும் கைப்பற்றி அல்காராசின் வெற்றிப் பயணத்திற்கு சின்னர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியிலும் விம்பள்டன் போட்டியிலும் சின்னர் வெற்றி பெற்ற நிலையில், ஏ.டி.பி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் வெற்றி அவரின் அடைவுநிலைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

வெற்றி கிண்ணத்துடன் சின்னருக்கு சுமார் 50 லட்சம் டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)