உலகம்

கல்பாறை சுரங்கம் இடிந்ததில் தொழிலாளி ஒருவர் பலி

17/11/2025 03:34 PM

சோன்பத்ரா, 17 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் வட உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கல்பாறை சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

மேலும், ஒன்பது பேர் இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மாநிலத்தின் தலைநகரான லுக்னாவ்-இல் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒப்ரா நகரில் உள்ள கிருஷ்ணா சுரங்கத்தில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சோன்பத்ரா போலீஸ் (Superintendent), அபிஷேக் வெர்மா கூறினார்.

துளையிடும் பணிகள் மேற்கொண்டிருந்தபோது, பாறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)