உலகம்

மத்திய ஜாவா நிலச்சரிவில் இருவர் பலி; 27 பேரை காணவில்லை

17/11/2025 04:59 PM

இந்தோனேசியா, 14 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, மத்திய ஜாவா மாகாணம், பஞ்சர்னேகரா எனும் பகுதியில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும், 27 பேரை காணவில்லை என்பதால் பலி எணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

30 வீடுகளும் விவசாய நிலங்களும் சேதமடைந்ததாக அந்நாட்டின் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்தது.

அதோடு, அம்மாகாணத்தில் உள்ள சிலகாப் எனும் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் எழுவரை காணவில்லை.

கனமழையினால் மத்திய ஜாவாவின் இரு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் இன்னும் தொடரப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)