அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, செயல்திறனை பராமரிப்பதன் அடிப்படையில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிட வேண்டும்

18/11/2025 05:02 PM

சபா, 18 நவம்பர் (பெர்னாமா) -- வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் சபாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை பேணுவது ஆகியவற்றின் அடிப்படையில் அம்மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் நம்பிக்கை கூட்டணியின் திறன்களை மதிப்பிடுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதால், பல்வேறு புதிய வாக்குறுதிகளை வழங்குவதை விட இந்த அணுகுமுறை மிகவும் முக்கியம் என்று கெஅடிலான் கட்சித் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார்  தெரிவித்தார்.

இம்முறை சபா மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் தங்கள் பணிகளைச் செயல்படுத்துவதில் உத்வேகத்துடன் இருப்பதாகவும்...

இது, மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பால் உந்தப்படுவதாகவும் நூருல் இசா அன்வார்  விவரித்தார்.

''டத்தோ பித்தோ கூறியது போல் நாங்கள் உண்மையிலேயே உறுதி செய்ய விரும்புகிறோம். ஆம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை நன்றாக உள்ளது. அதோடு சரியான வேட்பாளர் யாரும் இல்லை. ஆனால்அதற்கான உறுதிப்பாடு இருக்கின்றது,'' என்றார் நூருல் இசா அன்வார். 

இனனம் சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கை கூட்டணியைப் பிரதிநிதித்து போட்டியிடும் டத்தோ பித்தோ உடன் கம்போங் டம்பாய் மக்களைச் சந்தித்த நூருல் இசா அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)