கோலாலம்பூர், 18 நவம்பர் (பெர்னாமா) -- ஹரிமாவ் மலாயா காற்பந்து அணியின் ஏழு அயல்நாட்டு ஆட்டக்காரர்கள் தொடர்பான விவகாரத்தை மலேசிய காற்பந்து சங்கம் FAM விளையாட்டுக்கான அனைத்துலக நடுவர் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
அந்த எழுவரின் தகுதி நிலை தொடர்பாக FAM முன்வைத்த மேல்முறையீட்டை நிராகரித்த விவகாரத்தில் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் FIFA வழங்கிய முழுமையான தீர்ப்புக்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
நீதியை நிலைநிறுத்த உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக FAM-இன் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு கூறினார்.
இது மலேசியா மட்டுமின்றி தொடர்புடைய அமைப்புகள் நிர்ணயித்துள்ள ஆட்டக்காரர்களின் தகுதி செயல்முறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கிறது.
மேலும், ஆட்டக்காரர்களின் உரிமைகளுக்காக போராடுவதில் FAM உறுதியாக உள்ளது என்றும் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியான சட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதை FAM உறுதிப்படுத்தியுள்ளது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)